வண்டி பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மக்கள் மனு
விழுப்புரம்: விவசாய வண்டி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். வானுார் அடுத்த நாராயணபுரத்தை சேர்ந்த பொது மக்கள் கொடுத்துள்ள மனு: எங்களுடைய விவசாய நிலங்களுக்கு செஞ்சி பாதை என்கிற வண்டிப்பாதை வழியாக சென்று வருகின்றோம். இந்த பாதை நாராயணபுரம் மற்றும் ரங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை இணைக்கிறது. இந்த பொது பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். விவசாய நிலங்களில் இருந்து கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களை ஏற்றிச்செல்ல பாதையில்லாமல் அவதியடைந்து வருகிறோம். இது குறித்து தாசில்தாரி ட ம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, கலெக்டர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.