உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மண்டலத்தில் புதிதாக 284 மினி பஸ்களுக்கு அனுமதி

விழுப்புரம் மண்டலத்தில் புதிதாக 284 மினி பஸ்களுக்கு அனுமதி

விழுப்புரம் : விழுப்புரம் மண்டலத்தில், புதிதாக 284 மினி பஸ்கள் சேவை துவக்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், தற்போது 69 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது புதிதாக 76 மினி பஸ்களை கூடுதலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலுார் மாவட்டத்தில் 95 மினி பஸ்கள் உள்ளது. புதிதாக 65 மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 90 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கு, புதிதாக 84 மினி பஸ்கள் இயக்கவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கும் 70 மினி பஸ்களுடன், புதிதாக 59 புதிய மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மண்டலத்தில் மொத்தம் 284 மினி பஸ்களை புதிதாக இயக்க, அரசு செயல்முறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுதும் அரசு அனுமதித்த புதிய வழித்தடங்களில், மினி பஸ்கள் துவக்க விழா சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் புதிய மினி பஸ்களை துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் 34 புதிய வழித்தடங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 புதிய வழித்தடங்களிலும், கடலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 8 புதிய வழித்தடங்களிலும் மினி பஸ்கள் துவக்கப்பட உள்ளன.அனுமதிக்கப்பட்ட மீதமுள்ள 222 புதிய வழித்தடங்களில் படிப்படியாக மினி பஸ்கள் இயக்கப்படும். விழுப்புரம் மண்டலத்தில், ஏற்கனவே 324 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 15ம் தேதி முதல், 136 மினி பஸ்கள் மாற்று வழித்தடங்களில் (விரிவாக்கம் செய்து) இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை