உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டுமனை பட்டா மாற்றக்கோரி மனு

வீட்டுமனை பட்டா மாற்றக்கோரி மனு

விழுப்புரம்: அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை பட்டா மாற்றம் செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.விழுப்புரம் அடுத்த சாலையாம்பாளையம் அருணகிரி மனைவி கஸ்துாரி திலகம் தலைமையில் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில்; சாலையாம்பாளையம் கிராமத்தில், 28 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இலவச மனைபட்டாவை அளந்து கொடுக்க கலெக்டரிடம் மனு கொடுத்தோம். பட்டா மாற்றம் செய்ய ஆவணங்களை சாலையாம்பாளையம் கிழக்கு வி.ஏ.ஓ., பெற்று சென்றும் இதுவரை, பட்டா மாற்றம் செய்யவில்லை. இதனால், வீடு கட்ட முடியாமல் உள்ளது. பட்டா மாற்றம் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ