உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருச்சிற்றம்பலத்தில் பெட்டிஷன் மேளா

திருச்சிற்றம்பலத்தில் பெட்டிஷன் மேளா

வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் 'பெட்டிஷன் மேளா' நடந்தது.கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் உள்ள கிளியனூர், ஆரோவில், வானுார், கோட்டக்குப்பம் ஆகிய போலீஸ் நிலையங்களில், பொது மக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது, மக்களிடம் நேரடியாக விசாரிக்கும், 'பெட்டிஷன் மேளா' திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, ஜெ.பி., மகாலில் நடந்தது.டிஎஸ்பி., உமாதேவி பங்கேற்று, மனுக்கள் குறித்து விசாரணை நடத்தினார். இதில் 30க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், சிவராஜன், சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நாகராஜ், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் லெனின், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி