உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நள்ளிரவில் பன்றிகள் பிடிப்பு

நள்ளிரவில் பன்றிகள் பிடிப்பு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி சார்பில் நகரில் சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டது. திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து நகரப் பகுதியில் பொது மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வரும் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக வசந்தபுரம், எம்.ஜி.ஆர்.நகர், உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை பொது மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் பானுமதி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் செந்தில்குமார் மேற்பார்வையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியிலிருந்து நள்ளிரவு 1:30 மணி வரை தொடர்ந்து தனியார் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களில் சுற்றித்திரிந்த 27 பன்றிகளை வலை வைத்து பிடித்து அப்புறப்படுத்தினர். இதேபோல் நகரத்தில் பிற பகுதிகளிலும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை