உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நெடுஞ்சாலையில் மண் குவியல்

 நெடுஞ்சாலையில் மண் குவியல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரதான சாலையில் மண் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் வழுதரெட்டி பகுதியில் சாலையின் இருபுறங்களிலும், மண் குவிந்துள்ளது. இதில் வாகன ஓட்டிகள் செல்லும்போது வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால், சாலையின் ஒருபகுதியை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதற்கு அச்சமடைந்து வருகின்றனர். எனவே, சாலையில் குவிந்துள்ள மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்