மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
31-Jul-2025
அவலுார்பேட்டை: கோவில்புரையூரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவில்புரையூர், திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் மழை வளத்திற்காக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மேலும், இதில் அவலுார்பேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சசிகலா மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், வி.ஏ.ஓ., காளிதாஸ் மரங்களின் பயன்கள், மரங்களை பாதுகாத்தல் குறித்து விளக்கமாக பேசினார்.
31-Jul-2025