உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க., வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை சார்பில் முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ம.க., வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் மாவட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்டத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் வரவேற்றார். மாநில நிர்வாகி மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.நிர்வாகிகள் ஞானவேல், வீரமணி, பிரபாகரன், தேசிங்குராஜன், பாரதிராஜா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். பா.ம.க., நிறுவனர் ராமதாசை, அவமதித்து பேசிய, முதல்வர் ஸ்டாலினை கண்டித்து கோஷமிட்டு, பிறகு கலைந்து சென்றனர்.செஞ்சி: செஞ்சியில் நீதிமன்ற வளாகம் எதிரே சமூக நீதி பேரவை வழக்கறிஞர்கள் சார்பில் மாநில துணை தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் மணிகண்டன், சின்னதுரை, பாலாஜி முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் ராஜாராம் கண்டன உரை நிகழ்த்தினார். வழக்கறிஞர்கள் சுதாகர், சுதன், சுபாஷ், வானதி, ராஜலட்சுமி, திருமலை மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சரவணன் நன்றி கூறினார்.திண்டிவனம்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் நேற்று நடந்த ஆர்பாட்டத்திற்கு, பேரவையின் மாநில செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர்கள் விஜயகுமார், ஜெயராஜ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !