உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

அரசு பஸ் டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

விழுப்புரம் : விழுப்புரம் டிராபிக் போலீசார் சார்பில், அரசு பஸ் டிரைவர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொது மேலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல் பேசினார். நிகழ்ச்சியில், அரசு பஸ் டிரைவர்களுக்கு சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, துரைராஜ், போக்குவரத்து கழக உதவி பொறியாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை