உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

சிறுமி மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

கோட்டக்குப்பம்: வீட்டில் தனியாக இருந்த சிறுமியை தாக்கி, தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டக்குப்பம் அருகே, ஆப்பிரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிறுமி, பிளஸ் 1 வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த, 6ம் தேதி உடல் நலம் சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர், அவரது வீட்டிற்குள் புகுந்தனர். சிறுமியை சுவற்றில் தள்ளி கழுத்தை நெரித்து தாக்கி மிரட்டல் விடுத்தனர். அவர் சத்தம் போட்டதால், அவர்கள் வெளியில் ஓடி வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த மற்றொரு நபருடன் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து சிறுமியின் தந்தை கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !