உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை கிராமத்தில் ரயில்வே டிராக்கில் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. கருப்பு கட்டம் போட்ட சட்டை மற்றும் காப்பி கலர் பேண்ட் அணிந்திருந்தார். ரயில் மோதி இறந்தாரா. அல்லது ரயில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி