மேலும் செய்திகள்
தோசை கல்லால் மனைவியை அடித்து கொன்றவர் கைது
19-Aug-2025
விழுப்புரம்: விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி, 32; ராணுவ வீரர். இவர், கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்தார். அப்போது, ஊரில் உள்ளவர்களிடம் அதிகம் கடன் வாங்கி செலவழித்துவிட்டதாக தெரிகிறது. இதனால், கடனை அடைப்பதற்கு தனது நிலத்தை விற்றுவிட்டு, அதிலிருந்து ரூ.1.30 லட்சம் பணத்தை வாங்கி வந்துள்ளார். திடீரென கடந்த ஜூலை 15ம் தேதி வீட்டிலிருந்து, மீண்டும் ராணுவ பணிக்கு செல்வதாக கூறிச்சென்றவர், பணிக்கு செல்லவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி தமிழ்ச்செல்வி, 27; நேற்று முன்தினம் புகாரளித்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
19-Aug-2025