உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து திருட்டு போலீஸ் விசாரணை

வீடு புகுந்து திருட்டு போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் சிவகுரு, 49; வனத்துறை ஊழியர். இவரது சகோதரி கலையரசி, 52; விழுப்புரம் பாண்டியன் நகர் 4வது தெருவில் வசித்து வருகிறார். கலையரசி கனடாவில் குடும்பத்தோடு வசித்து வருவதால், பாண்டியன் நகரில் உள்ள வீட்டை, அவரது தம்பி சிவகுரு பராமரித்து வருகிறார். சிவகுரு கடந்த 31ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊருக்கு வந்துவிட்டார். நேற்று முன்தினம் பாண்டியன் நகர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 1 சவரன் நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ