கிணற்றில் எருக்கஞ்செடி போலீஸ் விசாரணை
திண்டிவனம்; ஊராட்சி குடிநீர் கிணற்றில் எருக்கஞ்செடி மற்றும் ஊமத்தங்காய் வீசியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திண்டிவனம் அடுத்த அகூர் ஊராட்சி அலுவலகம் அருகில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் உயிருக்கு ஆபத்தான நோயை பரவ செய்யும் எருக்கஞ்செடி மற்றும் ஊமத்தங்காய் ஆகியவற்றை வீசியுள்ளனர். ஊராட்சி செயலர் மணிவண்ணன் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.