உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ மோதி போலீஸ் காயம்

ஆட்டோ மோதி போலீஸ் காயம்

விழுப்புரம்; ஆட்டோ மோதிய விபத்தில் பெண் போலீஸ் படுகாயமடைந்தார்.விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு பாதையை சேர்ந்தவர் கணேஷ்குமார் மனைவி மங்கவர்த்தாள், 36; விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில், பணிபுரிகிறார். இவர் தனது மொபட்டில் டிராபிக் போலீஸ் நிலையம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில், படுகாயமடைந்த மங்கவர்த்தாளை அருகிலிருந்தவர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.விழுப்புரம் மேற்கு போலீசார், சாலாமேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகதீஸ்வரன் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி