மேலும் செய்திகள்
மாணவியருக்கு தொல்லை 'சில்மிஷ' ஆசிரியர் கைது
05-Nov-2025
விழுப்புரம்: மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும், 17 வயது மாணவியை காணவில்லை என, பெற்றோர் ஆரோவில் போலீசில் புகார் அளித்தனர். நவ., 6ல் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் அதிகாலை, 4:30 மணியளவில் தனியாக நடந்து வந்த மாணவியிடம், அவ்வழியாக பைக்கில் சென்ற பிரம்மதேசம் போலீஸ்காரர் இளங்கோ பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவியை போலீசார் மீட்டனர். பிரம்மதேசம் போலீசார், நேற்று முன்தினம் இளங்கோவை போக்சோவில் கைது செய்தனர். இளங்கோவை, சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., சரவணன் நேற்று உத்தரவிட்டார்.
05-Nov-2025