மேலும் செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2025
விழுப்புரம்: பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சங்க தேர்தல் மற்றும் இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழுப்புரம் வி.ஆர்.பி.,மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் வேமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். தேர்தல் ஆணையராக இளங்கோவன், சுப்ரமணி, காமராஜ் ஆகியோர் செயல்பட்டனர். தேர்தலில், நிறுவன தலைவராக வேமன், சிறப்பு தலைவர் செல்வராஜ், மாநில தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொதுச் செயலாளர் அனந்தகிருஷ்ணன், பொருளாளர் ஜெகதீசன், அமைப்பு செயலாளர் கமலக்கண்ணன், பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், மகளிரணி செயலாளர் கவிதா, துணை தலைவர் மு த்தையன், இணைச் செயலாளர் நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
06-Dec-2025