மேலும் செய்திகள்
சாலை பள்ளங்களை மூடுவதில் அதிகாரிகள் அலட்சியம்
02-Nov-2024
விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழிகள், உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே செல்லும் சுதாகர் நகர், கணபதி நகர் மெயின் ரோட்டில், சில வாரங்களாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக, பள்ளங்கள் எடுத்து, பணிகள் நடந்து வருகிறது. ஆளிறங்கு குழிக்காக பல இடங்களில் பள்ளம் எடுத்து, அதனை மூடியுள்ளனர்.சில தினங்களாக மழை பெய்து வருவதால், அந்த மூடிய பள்ளங்களில் நான்கு, ஐந்து இடங்களில் மண் உள்வாங்கிய நிலையில், மிகப்பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நீரில் பள்ளம் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று, சிக்கும் நிலை தொடர்ந்துள்ளது. இதனால், பள்ளங்களை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Nov-2024