உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மண்பாண்ட தொழிலாளர் மாநாடு

 மண்பாண்ட தொழிலாளர் மாநாடு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில கோரிக்கை மாநாடு நடந்தது. நகராட்சி திடலில் நடந்த மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கணபதி, பொருளாளர் மகேஷ்கண்ணன், மண்டல நிர்வாகிகள் ஏகாம்பரம், செல்வம், கேசவன், புதுச்சேரி மாவட்ட தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் நாராயணன், செயல் தலைவர் பழனி சிறப்புரையாற்றினர். மாவட்ட பொறுப்பாளர்கள் தியாகராஜன், மாரிமுத்து, துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டில், தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் மண் பானையும், மண் அடுப்பையும், மண்பாண்ட தொழிலாளர்களிடம் கொள்முதல் செய்து, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும். மண்பாண்டம் செய்வதற்கான களிமண் எடுப்பதற்கு ஏரி, குளங்களில் தடையில்லாத அரசாணை வெளியிட வேண்டும். மழைக் கால நிவாரண தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மண் விசை கருவிக்கு இலவச மின் சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை