உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மல்லர் கம்பம் வீரர்களுக்கு பவ்டா நிறுவனம் பரிசளிப்பு

மல்லர் கம்பம் வீரர்களுக்கு பவ்டா நிறுவனம் பரிசளிப்பு

விழுப்புரம்: மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பவ்டா நிறுவனம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் மாணவர்கள் அகில இந்திய அளவில் உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் 25 பேருக்கும் பவ்டா மற்றும் ரோஸ் மலர் நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் ஜாஸ்லின் தம்பி புத்தங்கள் மற்றும் தலா 1000 ரூபாய் வழங்கி பாராட்டினார். பாவேந்தர் பேரவைச் செயலாளர் உலக துரை, நாஞ்சில் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ