உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சண்முகசாமி, ரஷிதா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தண்டபாணி வரவேற்றார். கல்வி மாவட்ட தலைவர்கள் ரவி, ரெஜிஸ் கோரிக்கை உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், சென்னை சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கான 8 மணி நேர வேலையை உறுதிபடுத்த வேண்டும். தொழிலாளர்களை காவல் துறை கொண்டு ஒடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ