உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மூலம், தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடக்கிறது. முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பினை பெறலாம். தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள், தங்களின் அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விபர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை