உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆஞ்ச ேநயர் ேகாவில் தெப்பக்குளம் ரூ.2.82 கோடியில் சீரமைக்கத் திட்டம்

ஆஞ்ச ேநயர் ேகாவில் தெப்பக்குளம் ரூ.2.82 கோடியில் சீரமைக்கத் திட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் தெப்பக்குளம், ரூ.2.82 கோடி செலவில், புனரமைக்கப்படுகிறது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டையொட்டி லட்சதீப திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கோவில் வளாகத்தையொட்டி 4.16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள அய்யனார் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, சுற்றுச்சுவரில் வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது. குளத்தில் மாசடைந்த தண்ணீரை வெளியேற்றி, மின் மோட்டார் மூலம் புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டுகிறது. லட்சதீப விழாவிற்காக ஆண்டுதோறும், தெப்பல் குளத்தை, பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கபடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கோவில் பரம்பரை தர்மகர்த்தா குமார், இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு, நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்தார். இதையேற்று, அய்யனார் குளத்தை சீரமைத்திட, இந்து சமய அறநிலையத்துறை முன் வந்துள்ளது. இதன்படி, ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் நடைபயிற்சி பாதை, மின்விளக்கு வசதி, குளத்தின் மையப்பகுதியில் உள்ள தெப்பல் உற்சவ மண்டபம் புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. இந்தப் பணிகள், இன்னும் 9 மாத காலத்தில் முடிக்குமாறு, ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ