உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊழல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஊழல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், ஊராட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைமைக்குழு உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செல்வராஜ், ரமேஷ், கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தில் 27 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சத்தில் வாழும் இந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஊராட்சியில் நடைபெறும் அனைத்து வகை ஊழல் முறைகேடுகள் மீது மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையில் தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ