உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சரவணபாண்டியன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சதாசிவம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலர் நெடுமாறன் சிறப்புரையாற்றினாார். உமாசந்திரன் நன்றி கூறினார்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மோசடியான மருத்துவ காப்பீடு திட்டத்தை சீர்படுத்த வேண்டும், மத்திய அரசை போல் 80 வயது துவக்கத்திலேயே கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bhaskaran
ஜன 23, 2025 16:14

லஞ்சம் வாங்கி சேர்த்த பணம் எல்லாம் மருத்துவ செலவில் சுத்தமாக காலியாகிவிடும் பட்ட உடல் மனக் கஷ்டம் மட்டும் மிஞ்சும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை