உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மறியல்

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மறியல்

விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே சுடுகாட்டு பாதையை ஆக்கிரமிக்கும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை ஊராட்சி அடைக்கலாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கான பொது சுடுகாடு ஊர் ஒதுக்குப்புறமாக உள்ளது. சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை, அருகே உள்ள தனியார் மில் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் எழுப்ப முயன்ற போது, சர்வேயர் மூலம் அளந்த பின் கட்டுமானப் பணியை தொடர வேண்டும் என அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தனர். இந்நிலையில், பொதுமக்கள், போலீசார் தடுத்தும், சுடுகாட்டுக்குச் செல்லும் பொது பாதையை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தினர் நேற்று காலை, மீண்டும் சுவர் எழுப்பும் பணியை துவங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அடைக்கலாபுரம் கிராம மக்கள், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு முன் திரண்டு, மதியம் 12:00 மணிக்கு, கலெக்டர் பெருந்திட்ட வளாக சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதி சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும், இப்பிரச்னை குறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமிக்கும் தனியார் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளித்து செல்லும்படி 12:15 மணிக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை