உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி , மேம்பாட்டு கழகம் துாய்மைப் பணியாளர் நல வாரியத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார்.துாய்மைப் பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன், பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர். தாட்கோ மேலாளர் ரமேஷ்குமார் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.மஸ்தான் எம்.எல்.ஏ., துாய்மை பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி