மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
02-May-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. விழுப்புரம் அர்ச்சனா ஓட்டலில் நடந்த விழாவிற்கு, சங்க தலைவர் சபரிராஜா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சத்தியா வரவேற்றார். சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் அஸ்வின்குமார், வழக்கறிஞர்கள் பிரபு, துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் சிவராஜன், மாநில மகளிரணி தலைவர் பொற்கொடி, விழுப்புரம் மாவட்ட தலைவர் தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.விழாவில், தொழிலாளர்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பொது மருத்துவ முகாமில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்தனர். தண்டபானி நன்றி கூறினார்.
02-May-2025