மேலும் செய்திகள்
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கும் விழா
29-Apr-2025
மயிலம்: மயிலம் வட்டார துாய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் துாய்மை பணிக்கான கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கூட்டேரிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணிமாறன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ.,க்கள் சங்கர், நாகராஜன் வரவேற்றனர். துணை பி.டி ஓ.,க்கள் அர்ஜுனன், விஜயகுமார் மயிலம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் கண்ணன், தமிழரசன், செல்வகுமார், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சேகர், ஊராட்சி செயலாளர்கள் சிவகுமார், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Apr-2025