உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாட்கோ நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தாட்கோ நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாட்கோ துறை மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில், 8 பயனாளிகளுக்கு வாகனம், 10 தற்காலிக துாய்மை காவலர்களுக்கு நலவாரியம் உறுப்பினர் அடையாள அட்டை உட்பட 18 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தாட்கோ தலைவர் இளையராஜா வழங்கினார். அப்போது, துாய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன், தாட்கோ மேலாளர் ரமேஷ்குமார், உதவி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை