உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தரமற்ற பாலப் பணி மக்கள் புகார் மனு

தரமற்ற பாலப் பணி மக்கள் புகார் மனு

விழுப்புரம் : நரையூர் கிராமத்தில் வாய்க்கால் பாலம் தரமற்று கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.மனு விபரம்:நரையூர் கிராமத்தில் புதிதாக வாய்க்கால் பாலம் கட்டி வருகின்றனர். 10.80 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பாலத்தின் அடித்தளம் எர்த் ஒர்க் சரியாக போடாமல், தரமின்றி கட்டி வருகின்றனர். இது குறித்து, ஊராட்சிகள் உதவி இயக்குநர், கோலியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் பணி நடந்து வருகிறது.இதனால், மக்களின் வரிப்பணம் விரயமாகிறது. இந்த பாலம் அமைக்கும் பணியை, அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை