உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  எதப்பட்டு சாலையோரம் மண் அரிப்பு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 எதப்பட்டு சாலையோரம் மண் அரிப்பு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அவலுார்பேட்டை: எதப்பட்டு கிராமத்தில் உள்ள சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனுார் ஒன்றியத்தின் கடைசி பகுதியாக உள்ள எதப்பட்டு கிராமத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையினால் ஏரி நிரம்பி அதிகளவில் உபரி நீர் வெளியேறியது. மன்சூராபாத், கொசவந்தாங்கல், புத்தேரி, குளமன ஏரி உள்ளிட்ட 4 கிராமங்களைச் சேர்ந்த 4 ஏரிகள் நிரம்பி உபரி நீர் எதப்பட்டு ஏரிக்கு வந்தடைகிறது. இந்த ஏரி நிரம்பி மேல்வைலாமூர் ஏரிக்குச் செல்கிறது. எதப்பட்டு ஏரி நிரம்பியதில் அதிகளவு உபரி நீர் வெளியறியதால் கிராம தெருக்களிலும், வெள்ள நீர் சென்றது. அவலுார்பேட்டை சாலை வழியில் உள்ள கண்மாய்கள் போதுமான அளவில் இல்லாத நிலையில் தண்ணீர் உள் வாங்கி வேகமாக செல்ல முடியாமல் திணறி ஊருக்குள் பாய்ந்து சென்றது. வெள்ள நீரின் அளவு அதிகரித்ததால் கண்மாய்கள் உள்ள நெடுஞ்சாலை துறையின் தார் சாலை ஓரம் துண்டிக்கப்பட்டு, பெரிய குளம் போல் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரும்பு பயிரிட்ட நிலத்தின் வழியாக மேல்வைலாமூர் ஏரிக்கு தண்ணீர் தற்போதும் சென்று கொண்டிருக்கிறது. இதனால், எதப்பட்டு சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் ஆபத்து அச்சத்தில் செல்கின்றனர். இரவு நேரத்தில் பைக்குகளில் செல்வோர் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. முக்கிய சாலையின் குறுக்கே செல்லும் நீர் ஊருக்குள் வராமல் ஏரிக்கு செல்வதற்கு ஏற்ப கால்வாய்கள் துார் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ