உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சம்

மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சம்

வானுார் : ராயப்பேட்டையில் இருந்து ஆப்பிரம்பட்டு வரை மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். வானுார் தொகுதி ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, நெசல் ஆகிய கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதுச்சேரி, ஆரோவில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி, வானுார் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்குச் சென்று படித்து வருகின்றனர். மேலும் சஞ்சீவிநகர், ஆலங்குப்பம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்களும், காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றனர். இந்த சாலையில் மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் வீடுகளுக்கு செல்லும் போது, மின் விளக்குகள் இல்லாததால் சாலையில் செல்ல அச்சமாக உள்ளது. இதனால் பகல் நேரத்திலேயே, பணியை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி விடுகிறோம். இதனால் சாலையில் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை