ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு : பொதுமக்கள் மனு
விழுப்புரம் : சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:எங்கள் கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரியில் ண் எடுக்க தனியார் குத்தகைதாரர் இயந்திரம் மூலம் மண்வெட்டி எடுத்து வருகிறார். குடியிருப்பு அருகே உள்ள இந்த ஏரியில் விதிகளை மீறி மண் எடுப்பதால் சிறுவாடி குடியிருப்பு பொதுமக்கள் பாதிக்கும் நிலையுள்ளது.ஏரியில் இதனால் பள்ளம் ஏற்பட்டு, மனித உயிர் இழப்பு ஏற்படுவதோடு, கால்நடைகளுக்கு மேய்ச்சல் இடம் இல்லாமல் போகிறது.அவர்கள் மண் எடுக்க திட்டமிட்டுள்ள வழித்தடமான 1,750 மீட்டர் சாலை, குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் உள்ளது. இந்த வழித்தடத்தில் 250 வீடுகள் உள்ளது. அதில் 50 பழைய வீடுகளும், 9 சிறுபாலங்களும், ஒரு பள்ளி வளாகமும், அங்கன்வாடி மையயும் உள்ளதால் இவை அனைத்தும் சேதமாகும் நிலையுள்ளது. நீர்பாசனமும் பாதிக்கும். மண் எடுக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.