உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பால் பொதுமக்கள் அவதி

பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பால் பொதுமக்கள் அவதி

விழுப்புரம் : விழுப்புரத்தில் பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் நகராட்சி 1வது வார்டு பாப்பான்குளம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி குடியிருப்புகளுக்கு, நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், செஞ்சி சாலையில் உள்ள இரண்டு மேன் ஹோல்களில், கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் வீடுகளில் உள்ள கழிவறைகளில் நிரம்பி வழிகிறது. இதனை முழுமையாக சரிசெய்வதிற்கு பதில், நகராட்சி சார்பில்மேன்ஹோலில் இயந்திரம் வைத்து வழிந்தோடும் கழிவுநீரை சாலையோர வாய்க்காலில் விடுகின்றனர். இந்த பணியும், 2 நாட்களுக்கு ஒரு முறை நடப்பதால், வீடுகளின் கழிவறைகளில், கழிவுநீர் நிரம்பி கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, பாதாள சாக்கடை அடைப்பை முழுமையாக சீரமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ