உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்: 5 பேர் கைது; 3 வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்: 5 பேர் கைது; 3 வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரம்; புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய ஐந்துபேரை போலீசார் கைது செய்து, 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில், பில்லுார் ஏரிக்கரை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மனைவி மீனாட்சி, 25; என்பதும் 90 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார், மீனாட்சியை கைது செய்து மதுபாட்டில்கள், மொபட்டை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இதேபோன்று, விழுப்புரம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில், மேற்கு சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் 129 புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெரு முருகன், 38; அவரது மனைவி அனுமதி, 32; ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருசக்கர வாகனம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, விழுப்புரம் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் 361 புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்த நந்தனார் தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் குமார் மனைவி தனலட்சுமி, 22; ஆகியேரை மேற்கு போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !