உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீபாவளி பண்டிகையையொட்டி பலகார கடைகளில் சோதனை

தீபாவளி பண்டிகையையொட்டி பலகார கடைகளில் சோதனை

விழுப்புரம்; தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் இனிப்பு, பலகாரம் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று விழுப்புரம் நேருஜி ரோடு, காமராஜர் சாலை, எம்.ஜி., ரோடு பகுதிகளில் உள்ள பலகார கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தரமற்ற பலகாரங்களை பறிமுதல் செய்தனர். அப்போது, ராமகிருஷ்ணன் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இனிப்பு, காரம் தயாரிக்க உரிமம் பெற்றோர் 175 பேர் உள்ளனர். இதில், முதல் கட்டமாக தற்போது 75 கடை களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 12 கடைகளில் தரமற்ற வகையில் இனிப்பு, பலகாரம் தயாரிப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு 2000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும், இவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து, இந்த சோதனைகள் நடைபெறும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை