உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேரணியில் ரயில்வே மேம்பாலம் தேவை: மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பார்களா?

பேரணியில் ரயில்வே மேம்பாலம் தேவை: மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பார்களா?

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பேரணியில் தடையின்றி போக்குவரத்திற்கும், அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ்கள் செல்லவும் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டிவனம், மயிலம் தொகுதி மற்றும் ஆரணி எம்.பி., தொகுதியைச் சேர்ந்த பேரணி ரயில்வே கேட் (லெவல் கிராசிங் எண்.108) வழியாக மேற்கு பகுதியில் பெரியதச்சூர், விக்கிரவாண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த எசாலம், எண்ணாயிரம், திருநந்திபுரம், பிரம்மதேசம், ஈச்சங்குப்பம் வழியாக நேமூர் - செஞ்சி பிரதான சாலைக்கும், பேரணிக்கு வடக்கே செண்டியம்பாக்கம், கொத்தமங்கலம், நல்லாளம், வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த கீழ்வைலாமூர், நாகந்துார், தளவாழப்பட்டு, மரூர், கல்லடிக்குப்பம் வழியாகவும் செஞ்சி - வல்லம் ஒன்றியங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இச்சாலை வழியாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய கொண்டு செல்கின்றனர். மேலும், தினமும் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கும், பேரணி, திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் சென்னையிலிருந்து பேரணி, நேமூர் வழியாக விழுப்புரம் சிறப்பு பஸ்கள் செல்லும் வழியாகவும் உள்ளது.கேரளா, கன்னியாகுமரி மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் இந்த பேரணி ரயில் நிலையத்தினை கடந்து செல்கிறது. இதனால் தினமும் 30 நிமிடத்திற்கு ஒரு முறை பேரணி ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன.இதனால் பொதுமக்கள், மாணவர்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு அவசர சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் வேனும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள், சமூக ஆர்வலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் தென்னக ரயில்வேக்கு மனுக்கள் அனுப்பியும் பலனில்லை.எனவே, கலெக்டர், அமைச்சர் பொன்முடி, ஆரணி தொகுதி எம்..பி., தரணிவேந்தன் எம்.எல்.ஏ.க்கள் அன்னியூர் சிவா, மஸ்தான், சிவக்குமார் போன்ற மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் நலன்கருதி மத்திய ரயில்வே அமைச்சர், தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை