சிறந்த மாணவர்களை உருவாக்கும் ராஜா தேசிங்கு கல்வி நிறுவனங்கள்
செஞ்சி அடுத்த களையூர்-நாட்டார்மங்கலத்தில் 1998ம் ஆண்டு ராஜா தேசிங்கு கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டு, முதன் முதலில் பாலிடெக்னிக் கல்லுாரி துவங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவராக செஞ்சி பாபு, செயலாளராக அய்யப்பன், பொருளாளர் அண்ணாமலையும், கல்லுாரி முதல்வராக அனுபவம் பெற்ற கார்த்திகேயன் உள்ளார். இதன் தலைவர் செஞ்சி பாபு கூறியதாவது: செஞ்சியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்லுாரி துவங்கப்பட்டது. கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் என ஐந்து துறைகள் உள்ளன. இங்கு சிறந்த அனுபவமும், தகுதியும் உள்ள பேராசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. ராஜா தேசிங்கு கல்வி அறக்கட்டளையின் மையில் கல்லாக 2012ம் ஆண்டு ராஜா தேசிங்கு பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கப்பட்டது. எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். 2024-2025 கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு பிரீகேஜி மற்றும் எல்.கே.ஜி., க்கான சேர்க்கை விஜயதசமியன்று 2ம் தேதி நடைபெற உள்ளது. எங்களின், ராஜா தேசிங்கு கல்வியியல் கல்லூரி 2008ம் ஆண்டு முதலும், ராஜா தேசிங்கு ஐ.டி.ஐ. 1997ம் ஆண்டு முதலும் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பாலிடெக்னிக் கல்லுாரியில் மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், பிட்டர் ஆகிய பிரிவுகள் உள்ளன. எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம். பாலிடெக்னிக் கல்லுாரி, ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் பெற்று தருகிறோம். சிறந்த மாணவர்களை உருவாக்கி, கல்வியால் அவர்களை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு செஞ்சி பாபு கூறினார்.