ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ஆலைகள் நிர்வாகக்குழு கூட்டம்
விழுப்புரம் : முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் யூனிட் 2, செஞ்சி செம்மேடு ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் யூனிட் 3 ஆகிய இரு ஆலைகளின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பரமசிவம் வரவேற்றார். துணைத் தலைவர்கள் ரங்கநாதன், கலிவரதன், வெங்கடசாமி, ராஜாராமன், தண்டபானி, தேவேந்திரன், நடராஜன், துணை செயலாளர்கள் ஆனந்தன், செந்தில்குமார், நாராயணன், சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், இந்த ஆண்டு கரும்பு பருவத்திற்கு விவசாயிகள், ஆலையாரிடம் இருந்து வாங்கும் விதைக் கரணைகள் நடவு முடிந்ததும் அதற்கான மானியத்தை ஆலையார் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு நடவுக்கு 4 அரை அடி பார் அமைக்கும் பணியை ஆலையார் ஏற்று இலவசமாக பார் அமைத்து தர வேண்டும். பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த சோலார் மின்சார வேலி அமைக்க வனத்துறை மூலம் மானியம் வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.