திருவக்கரை கோவிலில் ராமதாஸ் மனைவி தரிசனம்
வானுார்: திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில்களில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மனைவி சுவாமி தரிசனம் செய்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மனைவி சரஸ்வதிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா, தைலாபுரம் தோட்டத்தில் குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டது. இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் குடும்ப உறுப்பினர் கேக் வெட்டி கொண்டாடினர். நேற்று காலை 11:00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்திலிருந்து சரஸ்வதி, மகள் காந்திமதி ஆகியோர் வானுார் அடுத்த திருவக்கரையில் உள்ள பிரசித்திபெற்ற வக்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். சுவாமியை வழிப்பட்ட அவர்கள், தொடர்ந்து சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அம்பாள் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்தனர்.