உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேஷன் கார்டு: கலெக்டர் வழங்கல்

ரேஷன் கார்டு: கலெக்டர் வழங்கல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளித்த பெண்ணுக்கு உடனடி தீர்வாக, கலெக்டர் ரேஷன் கார்டு வழங்கினார்.திண்டிவனம் அடுத்த முருங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி மகாலட்சுமி. இவரது ரேஷன் கார்டு முடக்கத்தில் உள்ளதை விடுவிக்கக் கோரி நேற்று முன்தினம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளித்தார்.அதனைத்தொடர்ந்து, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் விசாரணை செய்து முடக்கத்தில் இருந்து விடுவித்து பயன்பாட்டிற்கு உடனடி தீர்வாக ரேஷன் கார்டு வழங்க உத்தரவிடப்பட்டது.இந்த ரேஷன் கார்டை மகாலட்சுமியிடம் நேற்று கலெக்டர் வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !