உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

 ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சேமங்கலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தோஸ்த் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், லாரியில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலுார் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் சொக்கநாதன், 19; முருகன் மகன் ஐயப்பன், 21; ஆகிய இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !