உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேஷன் கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். தலைவர் கோபிநாத், இணைச் செயலாளர்கள் பழனிவேல், தனசேகரன், ரங்கசாமி முன்னிலை வகித்தனர். ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் அப்பாதுரை சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை, சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.துணைத் தலைவர்கள் கதிர்வேல், தனசேகரன், ஜெகதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ரஷீத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை