உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்க ஆண்டு விழா கூட்டம்

ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்க ஆண்டு விழா கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ரியல் எஸ்டேட் முகவர்கள் நல சங்க நான்காம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடந்தது. விழுப்புரம் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கவுரவ தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஐயப்பன் துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார். துணை தலைவர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் அழகுராஜா, துணை செயலாளர்கள் ஈசாக், இளையராஜா, இணைச் செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், பாகுபாடின்றி விடுபட்ட அனைத்து மகளிர்க்கும் உதவி தொகை வழங்க வேண்டும், அத்தியவசிய பொருள்கள் மற்றும் கட்டுமான பொருள்களின் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !