உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி ஒன்றிய கூட்டம் ரூ.12 லட்சத்தில் பணிகள் தேர்வு

செஞ்சி ஒன்றிய கூட்டம் ரூ.12 லட்சத்தில் பணிகள் தேர்வு

செஞ்சி: செஞ்சி ஒன்றிய கூட்டத்தில் புதிய பணிகள் தேர்வு செய்யப்பட்டன.செஞ்சி ஒன்றிய கூட்டம் சேர்மன் விஜயகுமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, முல்லை முன்னிலை வகித்தனர். மேலாளர் மணிமாறன் வரவேற்றார். துணைச் சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர்கள் பச்சையப்பன், அன்னம்மாள், சாவித்திரி, ஆரோக்கியராஜ், கேமல், துரை, சீனிவாசன், முரளி, மல்லிகா, பனிமலர், ஞானாம்பாள், கலைவாணி, கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், செஞ்சி நகருக்கு குடிநீர் வழங்க 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள இடத்தை ஒப்படைக்க ஒப்புதல் வழங்குவது, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் செஞ்சி பகுதி கிராமங்களில் குடிநீர் பைப் லைன் வசதி, தடுப்புச் சுவர், திறந்தவெளி கிணறுக்கு மூடி அமைத்தல், சமையலறை கட்டடம் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகளை தேர்வு செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை