மேலும் செய்திகள்
ஐயப்ப சுவாமி கோவிலில் வரும் 26ல் மண்டல பூஜை
24-Dec-2024
விழுப்புரம்; மண்டல அளவிலான மின் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம், கடலூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் 26ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மண்டல மின் வாரியம் சார்பில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டுக்கான மின் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம், கடலூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், வரும் 26ம் தேதி வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு, மின் வாரிய மண்டல தலைமை பொறியாளர் மணிமேகலை தலைமையில் நடக்கிறது.எனவே, மின் நுகர்வோர்கள், மின் வாரியத்துறை தொடர்பான புகார்கள் இருந்தால் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளருக்கு மனு அனுப்பலாம். மேலும், மின் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, அது சம்பந்தமான குறைகள் இருப்பின் நேரில் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04142-223132, 223969 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
24-Dec-2024