உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் மண்டல இணை இயக்குநர் ஆய்வு

அரசு கல்லுாரியில் மண்டல இணை இயக்குநர் ஆய்வு

வானுார், ; வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வேலுார் மண்டல இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். இக்கல்லுாரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். நேற்று, வேலுார் மண்டல இணை இயக்குநர் மலர் கல்லுாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து கல்வி தொடர்பான குறைகளை கேட்டறிந்தார். மேலும், மாணவர்கள் சேர்க்கை விபரம், அலுவலக கோப்புக்கள், ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போது, கல்லுாரியில் தயாரிக்கப்பட்ட 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் கையேடு மற்றும் நாட்குறிப்பை வெளியிட, கல்லுாரி முதல்வர் வில்லியம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியின் போது, நிதியாளர் முருகானந்தம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை