உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வட்டார போக்குவரத்து துறையினர் ஓராண்டில் ரூ.2.25 கோடி அபராதம்

வட்டார போக்குவரத்து துறையினர் ஓராண்டில் ரூ.2.25 கோடி அபராதம்

விழுப்புரம் : விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வாகன விதிமீறல்களுக்கு, கடந்த ஓராண்டில் ரூ.2.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், கடந்த ஜனவரி மாதம் முதல், இதுவரை 4 ஆயிரத்து 523 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது ெஹல்மெட் அணியாததால் 325 வழக்குகள், மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுதல் 310 வழக்குகள், தகுதி சான்று இல்லாத வாகனம் 163, இன்சூரன்ஸ் செய்யப்படாத வாகனம் 361 , டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.மேலும் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிய 365 வாகனங்கள், உரிய சான்றுகள் இல்லாத 267 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடந்த ஜன.1ம் தேதி முதல் டிச.20ம் தேதி வரை 4 ஆயிரத்து 523 வாகன சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன விதிமுறை மீறல்களுக்காக ரூ.2 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 900 அபராதத் தொகையாக விதிக்கப்பட்டது.இதில், ரூ.44 லட்சத்து 63 ஆயிரத்து 497 தொகை உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், வாகன சாலை வரியாக ரூ.62 லட்சத்து 49 ஆயிரத்து 735 வசூலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி