கிடங்கல் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி
திண்டிவனம் : திண்டிவனம் கிடங்கல் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி துவங்கியது.பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் திண்டிவனம் கிடங்கல்(1) பகுதியிலுள்ள ஏரி உடைப்பு ஏற்பட்டது. இதனால்அங்குள்ள தரைப்பாலம், டிரான்ஸ்பார்மர், நகரப்பகுதிக்கு வரும் கண்டிரக்கோட்டை குடிநீர், ரெட்டணை, காட்ராம்பாக்கம் குடி நீர் பைப்புகள் சேதமடைந்தது.இந்நிலையில் கிடங்கல் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட தரைப்பாலம் தற்காலிகமாகஅங்குள்ள மக்கள் நகரப்பகுதிக்கு வரும் வகையில் சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. இதே போல் சேதமடைந்த மின்கம்பங்கள் உடைப்பு ஏற்பட்டகுடி நீர் குழாய்கள் சீரமைக்கும் பணி துவங்கியது.இதில் தரைப்பாலம் உடைப்பால் கிடங்கல் பகுதியை சேர்ந்த பொது மக்கள் ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து ஊருக்குள் வருவதால்ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தரைப்பாலம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.